Lyrics in Tamil
விடியலைத் தேடும் நெஞ்சங்களே
விடியாக் கனவின் சொந்தங்களே –2
நமக்கொரு தாய் இருக்கின்றாள்
வாருங்கள் அவளிடம் செல்வோம் –2
இருள் சூழும் உலகினிலே ஒளிதேடி அலையுது நெஞ்சம்
கீழ்வானம் சிவக்குமென்று உறங்காது ஏங்குது நெஞ்சம் –2
தாயவள் அழகு பொற்சித்திரம்
கீழ்வானின் நம்பிக்கை நட்சத்திரம் –2
புயலாக துன்பங்களும் இதயத்தின் கரையினில் மோதும்
மலராத மொட்டுகளாய் இதயத்தில் இன்பங்கள் வாழும் –2
வாழ்வினில் என்றும் போராட்டமே
தாயவள் அன்பில் தேரோட்டமே என்றும் தேரோட்டமே
Spread the love