Saint Jude Apostle – புனித யூதாவே உம்மை பணிந்து

Prayer to Saint Jude Apostle in Tamil

புனித யூதாவே உம்மை பணிந்து

(மெட்டு : ‘அலைகடல் ஒளிர்மீனே அல்லது ‘இராஜனாம் இயேசுவுக்கு’)

புனித யூதாவே – உம்மை பணிந்து புகழ்ந்து கொண்டாடுமெமை
இனிது காத்தாண்டிடவே வேந்தன் இயேசுவை வேண்டிடுவீர்!
துன்பமாம் கடல் நடுவே – வருத்தித் துடித்துத் துயர்படுவோர்
இன்பவான் துறைசேரத் – துணையாய் இலக்குமப் போஸ்தலரே
தற்பரன் உமக்களித்த – அரிய தனிப்பெரும் சலுகையினால்
பற்பல அற்புதங்கள் – புரியும் பண்பினை என் சொல்வோம்
திருமறை செழித்திடவே – உயிரைத் தியாகஞ்செய்த உடலின்
குருதியெல்லாம் சொரிந்த – வீரக் குலமணியே வாழி!
நம்பிவந் தோர்களை நீர் – எந்த நாளும் கைவிட்டதில்லை
செம்மையாய் ஆதரித்து – அன்பாய்த் தீர்த்திடுவீர் தொல்லை
யேசுவின் நற்செய்தி – கூறி சோர்வின்றி பணியாற்றி
மசுறாவின் சுடர் போல் – விளங்கும் மாதவனே வாழி!

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *