Ealia Vadivil kudilil Piranthar Lyrics – எளிய வடிவில் குடிலில் பிறந்தார்

Ealia Vadivil kudilil Piranthar Christmas Song Lyrics in Tamil

Lyrics in Tamil:

எளிய வடிவில் குடிலில் பிறந்தார்
வாங்க வணங்கிடுவோம் (2)
அன்னை மரியின் மடியில் தவழும்
இயேசுவை வணங்கிடுவோம் – அவர்
வானம் புகழ பூமி மகிழ மண்ணகம் வந்துவிட்டார்
வாங்க – வாழ்த்திப் போற்றிடுவோம்
எளிய வடிவில் குடிலில் பிறந்தார் வாங்க வணங்கிடுவோம் (2)

வார்த்தையே மனுவாய் உருவான கடவுள்
வானவன் அன்பால் மீட்பரானார்
வானகம் விட்டு வாழ்விக்க வந்தார்
வானோர் போற்றும் தூயரானார்
பாவம் போக்கும் மாவீரன் இவரே
பாலகனாய் இங்கே தூங்குகின்றார் (2)
ஏழைகள் வாழ எளிமையில் பிறந்த
இயேசுவை வணங்கிடுவோம் – நாளும்
அவர் வழி வாழ்ந்திடுவோம்
எளிய வடிவில் குடிலில் பிறந்தார்
வாங்க வணங்கிடுவோம் (2)

ஏழை எளிய இறைமக்கள் வாழ்வில்
ஒளியை ஏற்ற பிறந்துவிட்டார்
பாவம் அறியா பரிசுத்த தேவன்
பாவிகள் நமக்காய்த் தோன்றிவிட்டார்
சமத்துவம் ஓங்க சன்னிதி சென்று
பாலகன் பாதம் பணிந்திடுவோம் (2)
ஏழைகள் வாழ எளிமையில் பிறந்த
இயேசுவை வணங்கிடுவோம் – நாளும்
அவர் வழி வாழ்ந்திடுவோம்

MP3 Song:

[sc_embed_player fileurl=”http://www.bibleintamil.net/iraialai/mp3s/1078.mp3″]

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *