Deva thayin Matham Lyrics – தேவ தாயின் மாதம்

Lyrics in Tamil

தேவ தாயின் மாதம் இது அல்லவோ..! இதை
சிறப்பாய் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழா — 2

பூவிலுள்ள மானிடர்க்கு தேவசுதன் தந்த அன்னை
புண்ணிய வரங்கள் எல்லாம் கொண்ட அன்னையே — 2
ஆவலுடன் நாம் எல்லோரும் தேவமரி பாதம் கூடி
ஆனந்த மிகுந்த பல கீதங்களைப் பாடுவோமே –தேவ தாயின்

தோட்டங்களில் உள்ள பல வாட்டமில்லா புஷ்பங்களை
சோடு சோடாய் சேர்த்து நல்ல மாலை கட்டுவோம் — 2
கூட்டமாக எல்லாம் சேர்ந்து வீட்டிலுள்ள பேரை சேர்த்து –2
கோயிலுக்கு சாயும் வேளை ஆவலுடன் போவோம் வாரீர் — தேவ தாயின்

ஒவ்வொரு வீட்டார்களெல்லாம் ஒவ்வொரு நாள் சிறப்பிக்க
ஒப்பந்தமே செய்தால் ஒரு தப்புமில்லையே – 2
இவ்விதமே செய்தால் பலன் எவ்வளவோ கூடிவரும் – 2
இந்த மாதம் எல்லோருக்கும் நல்ல வரம் சேர்ந்து வரும் — தேவ தாயின்

Lyrics in English

Deva thayin Matham ithu allavoo ..! ithai
Sirapaai kondaadiave purapattu vareer thoola -2

Poovilulla maanidarku devasuthan thantha annai
Punnnniya varangal ellaam konnda annaiyae — 2
Aavaludan naam ellorum devamari paatham koodi
Aanantham miguntha pala geetangal paaduvomae – Deva thaayin

Thottangalil ulla pala vaatamillaa puspangalai
Sodu sodaay serththu nalla maalai kattuvom — 2
Koottamaaga ellaam sernthu veettilulla perai searthu–2
Koyilukku saayum velai aavaludan povom vaareer — thaeva thaayin

Ovvoru veetarkalellaam ovvoru naal sirappikka
oppanthamae seythaal oru thappumillaiyae – 2
ivvithamae seythaal palan evvalavo kootivarum – 2
intha maatham ellorukkum nalla varam sernthu varum — thaeva thaayin

Video

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *