Vanthom Un Mainthar Koodi Lyrics – வந்தோம் உன் மைந்தர்

Mary Matha Song Vanthom Un Mainthar Koodi

Lyrics in Tamil

வந்தோம் உன் மைந்தர் கூடி – ஓ
மாசில்லாத் தாயே
சந்தோஷ மாகப் பாடி – உன்
தாள் பணியவே !

பூலோகந் தோன்று முன்னே – ஓ
பூரணத் தாயே !
மேலோனின் உள்ளந் தன்னில் – நீ
வீற்றிருந்தாயே !

தூயோர்களாம் எல்லோரும் – நீ
தோன்றும் நாளினை
ஓயாமல் நோக்கிப பார்த்தே – தம்
முள் மகிழ்ந்தாரே !

நாவுள்ள பேரெல் லோரும் – உன்
நாமம் போற்றுவார்
பாவுள்ள பேர்களோ உன் – மேற்
பாட்டிசைப்பரே!

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *