Valaipookar Enge Pooreer Lyrics – வழிப்போக்கர்

Lyrics in Tamil

வழிப்போக்கர் எங்கே போறீர்?
கையிலே கோல் பிடித்தே?
பிரயாணம் போறோம் எங்கள்
ராஜாவின் சொற்படிக்கே
காடு மேடு ஓடை தாண்டி
எங்கள் ராஜன் நகர் நோக்கி
எங்கள் ராஜன் நகர் நோக்கி
போறோம் இன்ப நாட்டுக்கே

வழிப்போக்கர் யாது நாடி
போகிறீர் மேலோகத்தில்?
வெள்ளை அங்கி வாடா க்ரீடம்
பெறுவோம் அத்தேசத்தில்
ஜீவ ஆற்றில் தாகம் தீர்ப்போம்
தேவனோடென்றென்றும் வாழ்வோம்
தேவனோடென்றென்றும் வாழ்வோம்
இன்ப மோட்ச லோகத்தில்

வழிப்போக்கர் உங்களோடே
வரலாமா நாங்களும்?
வாரும்! வாரும்! கூடவாரும்
மனமுள்ளோர் யாவரும்
வல்ல மீட்பர் நம்மைக் காப்பார்
பின்பு வாழ்த்தி நம்மைச் சேர்ப்பார்
பின்பு வாழ்த்தி நம்மைச் சேர்ப்பார்
மோட்ச வாழ்வைத் தரவும்

Spread the love
Related Post
Disqus Comments Loading...