Anathi Snehathal Lyrics – அநாதி சிநேகத்தால் என்னை

Anathi Snehathal Song Lyrics and Video

Lyrics in Tamil:

1. அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரைய்யா
காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே

உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது

2. அனாதையாய் அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே – உங்க

3. நிலையில்லாதா உலகத்தில்
அலைந்தேனய்யா
நிகரில்லாத இயேசுவே
அனைத்துக் கொண்டீரே – உங்க

4. தாயின் கருவில் தோன்றுமுன்னே
தெரிந்துக் கொண்டீரே
தாயைப் போல ஆற்றி தேற்றி
அரவணைத்தீரே – உங்க

5. நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கிறேனைய்யா – உங்க

6. கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து முடித்தீரே – உங்க

Anathi Snehathal Song Video:

Spread the love
Related Post
Disqus Comments Loading...