இரட்சிப்பு இல்லாமல் எதை செய்யலாம்?

இரட்சிப்பு இல்லாமல் எதை செய்யலாம்?1. வேதகல்லூரியில் வேதம் கற்கலாம்
2. ஜெபிக்கலாம்,
3. சபைக்கு செல்லலாம்
4. ஏன் பிரசங்கம் கூட செய்யலாம்
5. ஐசுவரியவானாகலாம்
6. பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் காணலாம்
7. தீர்காயுசுள்ளவர்களாய் வாழலாம்
8. காணிக்கை, உதவி, போன்றவற்றை மற்றவர்களுக்கு வாரி வழங்கலாம்
9. வியாதியில்லாமல்கூட வாழலாம்
10. பேர், புகழ், பதவி பட்டம் பெறலாம்

இரட்சிக்கப்படாதவர்களித்திலும் இவைகள் உண்டு என்பதை நாமறிவோம்

இரட்சிகப்பட்டவர்களித்தில்

1. பணம் இல்லாமல் இருக்கலாம்
2. பிள்ளை பெறாமல் கூட இருக்கலாம்
3. சொந்த வீடு இல்லாமல் இருக்கலாம்
4. தீர்காயுசு இல்லாமல் இருக்கலாம்
5. பெரிய பதவி, படிப்பு, பட்டம் புகழ் இல்லாமல் இருக்கலாம்

அப்படியானால் இரட்சிக்கப்பட்டவனித்தில் என்ன தான் இருக்கிறது?

1. நித்தியஜீவன் இருக்கிறது
2. அதைத் தந்த கர்த்தர் இருக்கிறார்
3. பரிசுத்தம் இருக்கிறது
4. தேவபக்தி இருக்கிறது
5. போதுமென்கிற மனம் இருக்கிறது
6. பாவத்தை மேற்கொள்ளும் சக்தி இருக்கிறது
7. திவ்விய சுபாவம் இருக்கிறது
8. உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் இருக்கிறது
9. எப்போதும் சந்தோஷம் இருக்கிறது
10. கிறிஸ்துவின் சமாதானம் இருக்கிறது
11. இவையெல்லாவற்றிக்கும் மேல், பலவீனத்தில் பலன் விளங்கும், தேவகிருபை இருக்கிறது
12. ஆவிக்குரிய ஆசீர்வாதம் இருக்கிறது
13. பாவம் செய்தவுடனே துடிக்கும் மனசாட்சி இருக்கிறது
14. மன்னிப்பு கேட்கும் தாழ்மை இருக்கிறது
15. சகோதரனுக்காக ஜீவனைக்கொடுக்கும் அன்பு இருக்கிறது
16. எதிரியையும் நேசித்து ஜெபிக்கும் உள்ளம் இருக்கிறது
17. சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்கும் குணம் இருக்கிறது

இன்னும் பல இருக்கிறது, ஆக இரட்சிக்கப்பட்டவனித்தில் இருக்கும் இந்த குணாதிசயங்கள் மற்றவர்களிடத்தில் இல்லை என்பதே நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்பிக்கிறது.
நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேனா?

Spread the love
Related Post
Disqus Comments Loading...