Tamil Lyrics
தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
தண்ணரும் செந்தமிழ் தென்முனைக் குமரியும்
தலைபணி ஜெயராணி –2
தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
வெண்பனி இமயம் வெள்ளமார் கங்கை
விமரிசை புரிராணி –2
தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
வங்கமார் கலிங்கம் கொங்கனம் மலையாளம்
குதுகலி மகாராணி –2
தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
ஆந்திரம் குடகம் அகில மராட்டம்
ஆண்டிடும் மகாராணி — 2