Kathum Alai Kadal Orathile Lyrics – கத்தும் அலைகடல்

Lyrics in Tamil

அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர்
இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா
ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே
இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே

கத்தும் அலைகடல் ஓரத்திலே அன்புத்தாங்கியே வந்தவளே – 2
சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே
ஆரோக்கியம் தந்தவளே அம்மா – 2

வித்தகன் இயேசுவைப் பெற்றவள் நீயே
உத்தமர்க்கெல்லாம் நீ உற்றவள் தாயே – 2
சத்திய சன்மார்க்கம் தழைக்கச் செய்தாயே – 2
இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீயே
இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீ

நித்தம் உன் தாள் தேடி வருவார்கள் கோடி
நெஞ்செல்லாம் இனித்திடும் சுவையாகப் பாடி – 2
முக்திக்கு வழிசொன்ன இறைமகன் தாயே – 2
சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீயே
சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீ

Lyrics in English

Anthu siluvayil nee sinthaya kaneer
Inthu puviyellam neelkadalai aanathammaa
Onthithaan deivamena ualgirku kaatiavalee
Iraivanai kuzhanthayaa idayil sumanthavalee

Kathum alaikadal oorathilee ambuthaangiyee vanthavalee – 2
Sitham irangye velainagar vanthee
Aarokium tanthavale ammaa -2

Vitagan easuvai pettaval neeya
uthamarkellam nee uttaval thaye
Sathiya sanmargam thalaika seithaai
Itharai meel innal teerpaval neeye
Itharai meel innal teerpaval nee

Spread the love
Related Post
Disqus Comments Loading...