Arokiya Thaye Aatharam Neeye Lyrics – ஆரோக்கியத் தாயே

Arokia Thaye Velankanni Matha Songs

Lyrics in Tamil

ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே –2
தீராத துயர் போக்கும் மரியே எம் பரிவே
ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே

தீராத போராட்ட வாழ்க்கை எங்கள்
திகில் போக்க வரவேண்டுமே..!
கரை சேராத ஓடங்கள் ஆனோம் எம்மை
சிறை மீட்க வர வேண்டுமே..! — 2
வேறெங்கு போவோம் வினை தீர வேண்டி
நீர் எங்கள் நிறைவான தயவானதாலே –ஆரோக்கியத் தாயே

உனை நம்பி வந்தோரில் யாரும் இங்கு
ஏமாந்த கதை இல்லையே
எங்கள் தாய் உன்னை தினம் போற்றும் நெஞ்சில்
ஒரு துளியேனும் துயர் இல்லையே..! –2
விடியாத வாழ்வின் விடிவெள்ளியாக
விளங்கும் எம் தாயே உன் துணை வேண்டினோம் –ஆரோக்கியத் தாயே

Video Song

Spread the love
Related Post
Disqus Comments Loading...