Arokia Mathave Umathu pugal Lyrics – ஆரோக்கிய மாதாவே

Lyrics in Tamil

ஆரோக்கிய மாதாவே உமது புகழ்
பாடித் துதித்திடுவோம் -எந்நாளும்
பாடித் துதித்திடுவோம் (2)

அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே
வசித்திட ஆசை வைத்தாயே (2)
பலவிதக் கலைகளும் பாரில் சிறந்திட
அனைவருக்கும் துணை புரிந்தாயே (2)

தேன் கமழும் சோலை சூழ்ந்து விளங்கும்
வேளாங்கண்ணியில் அமர்ந்தாயே (2)
வானுலகும் இந்த வையகமும் -அருள்
ஓங்கிட எங்கும் நிறைந்தாயே (2)

முடவன் தந்த மோரைப் பருகிக் கொண்டே -அவன்
குறைகளை நீக்கிட நினைத்தாயே (2)
நடந்திடக் கால்களும் நோயற்ற வாழ்வும்
இயேசுவின் அருளால் கொடுத்தாயே (2)

பாலன் இயேசுவின் பசியைப் போக்கவே
பசும்பால் வாங்கித் தந்தாயே (2) -இந்த
உலகம் உள்ளவரை உன்னை வேண்டிக்கொள்ளும்
அடிமைகள் வாழ்ந்திட அருள்புரிவாய் (2)

சக்தி விளங்கும் உந்தன் தரிசனம் கிடைத்தால்
சஞ்சலம் யாவும் தீர்ந்திடுமே (2)
பக்தியுடன் உன்னைப் பணிந்து போற்றுபவர்
வாழ்வினிலே இன்பம் நிறைந்திடுமே (2)

கவலையினால் மனம் வருந்தும் ஏழைகளின்
கண்ணீரைக் கனிவுடன் துடைத்தாயே (2) -நமது
நன்னாளில் வந்து தானங்கள் செய்பவர்
உன்னத நிலைபெற வைத்தாயே (2)

Arokia Mathave Video Song

Spread the love
Related Post
Disqus Comments Loading...