Lyrics in Tamil
அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே
அம்மா உன் அருட்கரங்கள் உலகை அணைக்கத் துடிப்பது போல்
உன் திருக்கொடிதான் வானில் எழில் திகழ்ந்திடவே பறக்குதம்மா
திசையெல்லாம் மக்களை வருக வருகவென அழைக்குதம்மா
ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே
உன் திருக்கொடி வானில் பறக்குதம்மா – 2
கோலவிழாவின் சிறப்பினைக் கூறி
அசைந்தாடி மக்களை அழைக்குதம்மா
தன்னை உலகுக்குத் தந்திட்ட தேவனின்
தாயே உந்தன் நிழல் தேடி – 2
அன்னையே ஆரோக்கிய மாதாவே உன்னை
அண்டியே வந்தவர்கள் பல கோடி – 2
வையத்து மாந்தர்கள் துயரம் தீர்த்திட உற்றவள் நீயல்லவா – 2
அய்யன் இயேசுவை திருவயிற்றில் சுமந்து பெற்றவள் நீயல்லவா – 2
ஆழியின் கரையோரம் அமர்ந்தவளே – 2 – அம்மா
அருள்மழை பொழிந்திடத் தெரிந்தவளே
ஊழிவாழ் வரை உன் நாமமே வாழி – 2
வேளைமாநகர் வாழ் மரியே வாழி – 2