Lyrics in Tamil
அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை
அல்லல்கள் யாவும் தீருதம்மா
என்னை நீ தாலாட்டி அமர்ந்திடும் வேளை
பிள்ளை என் உள்ளம் மகிழுதம்மா –2
சோகத்தின் ரேகைகள் சுடுகின்ற போது
சேதங்கள் தீண்டாமல் கரை சேர்க்கிறாய் –2
பாதங்கள் தடுமாறி பயில்கின்ற போது
படியேற என்னோடு கரம் கோர்க்கிறாய்
தாயே நீதான் எந்தன் வாழ்வாகிறாய்
நிஜமென்று எண்ணிய நேசங்கள் கூட
நிறம் மாறும் போது நிறை செய்கிறாய் –2
உயிரான உறவுகள் பிரிகின்ற போது
உயிரோடு கலந்து நீ குறை தீர்க்கிறாய்
உயிரே நீதான் எந்தன் உறவாகிறாய்
Lyrics in English
Annai Un Pathathil Amarnthidum Velai
Allalgal yaavum theeruthammaa
Ennai nee thaalaati amarnthidum velai
Pillai en ullam magiluthammaa –2
Sogathin regaigal sudiginta pothu
Seetangal theendamal karai serkiraai –2
Paathangal tadumaari pailginta poorhu
Padiyera ennoodu karam koorkigraai
Thaye neethaan enthan vaalvagiraai