Yesu Peranthuvitar Messiah Vanthuvitar Lyrics – இயேசு பிறந்துவிட்டார்

Yesu Peranthuvitar Messiah Vanthuvitar Christmas Song Lyrics in Tamil

Yesu Peranthuvitar Messiah Vanthuvitar Lyrics

இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார்
சேர்ந்து பாடுங்க தன்னானன்னானே
தூதர் சொல்லிவிட்டார் அமைதியும் தந்துவிட்டார்
சேர்ந்து ஆடுங்க தன்னானன்னானே

மார்கழி மாசத்திலே கொட்டிடும் பனியினிலே
ஏழையின் குடிசையிலே பிறந்தவனே
தேவதூதன் சொன்ன செய்தியிது
பாவம் போக்க வந்த தெய்வமிது
எல்லோரும் இங்கே ஒன்றாகக்கூடி
பாலனின் பிறப்பில் அக்களிப்போம்

காட்டினிலே திருவிழா வீட்டில் இங்கு பெருவிழா
இறைமகன் தொழுவத்திலே பிறந்ததால்
விண்மீன் காட்டி தந்த வழியுமிது
மண்ணின் இருளைப் போக்கும் ஒளியுமிது
ஆடுவோம் நாமும் ஆடிப்பாடி
நாடுவோம் அவன் அருளைத் தேடி

Spread the love
Related Post
Disqus Comments Loading...