Andavar sannidhi Varungale Lyrics – ஆண்டவர் சன்னிதி

Andavar sannidhi Varungale Christmas Song Tamil Lyrics

Lyrics in Tamil:

ஆண்டவர் சன்னிதி வாருங்களே நல்
ஆனந்தமுடனே பாடுங்களே
இயேசுவின் பிறப்பில் மகிழுங்களே – 2
இந்த இகமதில் நாளும் முழங்குங்களே
வாருங்களே வாருங்களே – 2

உள்ளங்கள் உறவுகள் மகிழும்
இறைவன் அன்பில் வாழ்ந்து வந்தால்
அடுத்தவர் நலனில் நாட்டமே கொண்டால்
ஆண்டவர் வழியினில் நடந்திடலாம்
குறைகளைக் காணாமல் பிறரை ஏற்றால்
இயேசுவை அவரில் கண்டிடலாம் -2
இறைபணி தொடர இறையாட்சி மலர
இணைந்திடுவோம் நாம் இறைவனிலே

சாதிகள் இல்லை பேதங்கள் இல்லை
இறைவன் இயேசு வருகையிலே
நீதியுமுண்டு சமத்துவமுண்டு
இறைவன் வாழும் சமூகத்திலே
அன்பே கடவுள் என்பதை உணர்ந்தால்
இனிய உலகம் படைத்திடலாம்
குழந்தை இயேசு உள்ளத்தில் பிறந்தால்
புதிய பிறவியாய் வாழ்ந்திடலாம்

 

 

Spread the love
Related Post
Disqus Comments Loading...