En Yesuve En Deivame Lyrics – என் இயேசுவே என்

En Yesuve En Deivame Christmas Song Lyrics in Tamil

Tamil Lyrics:

என் இயேசுவே என் தெய்வமே
என் வாழ்வில் வாழ்வாய் மலர்ந்தவரே (2)
உன் சக்தி ஆற்றல் என்னோடு வாழும்
என் செயல்கள் எல்லாம் உன் பெயரைச் சொல்லும் (2)
என் இயேசுவே என் தெய்வமே
என் இதயப் பேழையில் பிறந்தவரே

உன் ஸ்பரிசம் என் அங்கம் எங்கெங்கும் உண்டு
உடல் தூய்மை போற்றியே என்றென்றும் வாழ்வேன்
அறிவாற்றல் ஒளியேற்றும் தீபம் நீ வாழும்
என் நினைவினிலே இருள் சூழ ஒருபோதும் துணியேன்
என் இதயமே பேராலயம் திருப்பீடத்தில் அருள் ஓவியம்
மலராய் மணமாய் நான் மாறுவேன் – 2

நீ சென்ற காலடித் தடயங்கள் தேடும்
குழந்தையாய் தொடர்வேன் உனை தினமும் வேண்டி
மண்மேடோ மலைமுகடோ முட்புதரோ எதுவோ
உனைத்தொடர்ந்து நான் வருவேன் தடைகளைத் தாண்டி
அன்பாலே வாழ்வை அர்ச்சனை செய்வேன்
நேயத்தின் செயலால் உன் விருந்தில் அமர்வேன்
உறவே உயிரே உனைப் பிரிய மாட்டேன் – 2

En Yesuve En Deivame  MP3 Song:

[sc_embed_player fileurl=”http://www.bibleintamil.net/iraialai/mp3s/1079.mp3″]

Spread the love
Related Post
Disqus Comments Loading...